Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அணுவாயுத இருப்பை அதிகரித்துள்ள சீனா

வாசிப்புநேரம் -

சீனா அதன் அணுவாயுத இருப்பை அதிகரித்துள்ளதைப் பற்றி அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

2035ஆம் ஆண்டுக்குள் சீனா அதன் அணுவாயுதங்களின் இருப்பை மும்மடங்கு வரை அதிகரிக்கும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

சீனாவின் சாதாரணப் படைப்பலத்திற்கு மேம்பாடுகளைச் செய்வதில் கவனம் செலுத்தப்பட்டதாக அமெரிக்காவின் வருடாந்திர அறிக்கை தெரிவித்தது.

சீனாவின் அதிகரித்துள்ள அணுவாயுதங்களின் இருப்பு, உலகின் நிலைத்தன்மையைப் பாதிக்கும் என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.

ஆனால் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளைக் காட்டிலும் தன்னுடைய அணுவாயுத இருப்பு பின்தங்கியிருப்பதாகச் சீனா தெரிவித்தது.

ரஷ்யாவும் அமெரிக்காவும் தரப்புக்கு 4,000 அணுவாயுதங்களைக் கொண்டுள்ளாதாகக் கூறப்படுகிறது.

அதன் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த பெய்ச்சிங் தயார் என்று அது கூறிற்று.

ஆனால் அமெரிக்காவின் அணுவாயுத இருப்பு சீனாவின் அளவுக்குக் குறைக்கப்பட்டால் மட்டுமே அது சாத்தியமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்