Skip to main content
கட்டி முடிக்காத கட்டடத்தில் வசிக்கும் ஒரு குடும்பம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

கட்டி முடிக்காத கட்டடத்தில் வசிக்கும் ஒரு குடும்பம்

வாசிப்புநேரம் -
கட்டி முடிக்காத கட்டடத்தில் வசிக்கும் ஒரு குடும்பம்

(படம்: Facebook / 8Days)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

கட்டி முடிக்கப்படாத அடுக்குமாடி வீடு...

அதில் வசிக்கிறது ஒரே ஒரு குடும்பம்.

சீனாவில் அந்தச் சம்பவம் நடந்தது.

வீட்டு உரிமையாளர் சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிற்காக சுமார் 192,000 வெள்ளி செலுத்தினார்.

ஆனால் கட்டடம் முழுமையாகக் கட்டி முடிப்பதற்கு முன்பே அந்தக் கட்டட மேம்பாட்டாளர் மாயமாக மறைந்துவிட்டார்.

வீடுகளின் கட்டுமானப் பணியும் நின்றுவிட்டது.

வேறு என்ன செய்வது என்று தெரியாமல் அந்த வீட்டு உரிமையாளர் மேலும் சுமார் 57,000 வெள்ளி செலவு செய்து தமது வீட்டை மட்டும் புதுப்பித்தார்.

அதை வாழ்வதற்கு ஏதுவாக மாற்றினார்.

அந்தக் கட்டடத்திலேயே தற்போது வசிக்கும் ஒரே குடும்பம் அவருடையது தான் என்று 8Days தெரிவித்தது.

இணையவாசிகள் பலருக்கும் பலவிதமான கேள்விகள்...

மின்சாரம், தண்ணீர், எரிவாயு விநியோகம் எல்லாம் அவருக்கு எப்படி கிடைக்கிறது என்று ஒருவருக்குக் குழப்பம்.

8Days காணொளியில் அந்த நபரின் வீடு உயரமான மாடியில் இருப்பது போல் தெரிகிறது.

மின்தூக்கி இருக்குமா? அல்லது தினமும் படிகளைத் தான் எடுக்க வேண்டுமா என்று இன்னொருவர் வினவினார்.

சீனாவில் சொத்துச் சந்தையில் ஏற்பட்ட பெரிய அளவிலான கடன் நெருக்கடியால் பல வீட்டுத் திட்டங்கள் பாதியில் கைவிடப்பட்டன.

பணம் கட்டிய பலருக்கும் அந்தப் பணமும் திருப்பிக் கிடைக்கவில்லை. வீடும் கிடைக்கவில்லை.
ஆதாரம் : 8 Days

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்