Skip to main content
நேப்பாளம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

நேப்பாளம் - துறைமுகச் சாலையைத் திறந்தது சீனா

வாசிப்புநேரம் -
நேப்பாளம் - துறைமுகச் சாலையைத் திறந்தது சீனா

(படம்: cnsphoto via REUTERS)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

கேரோங் (Gyirong) துறைமுகம் வழி நேப்பாளத்திற்குச் செல்லும் ஒரே சாலையைச் சீனா மீண்டும் முழுமையாகத் திறந்துள்ளது.

கனரக இயந்திரங்கள் அந்தப் பகுதியைச் சென்றடைய அது உதவும்.

சென்ற வாரம் நேப்பாளம் - திபெத் எல்லையைத் தாக்கிய பெருவெள்ளத்தில் அந்த G216 தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்தது.

சாலையில் பல பகுதிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

அந்தச் சாலையை மீண்டும் கட்டி முடிக்க மீட்புக் குழுவினர் பாடுபட்டனர்.

சாலை திறக்கப்படுவதற்கு முன்பு மீட்புப் பணியாளர்களுக்கு முக்கிய கருவிகளும் பொருள்களும் ஆகாயம்வழி கீழே போடப்பட்டன.

தொடர்ந்து பெய்த மழை, சவாலான நிலப்பரப்பால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது என்று சீன அதிகாரிகள் கூறினர்.

கேரோங் துறைமுகம் அமைந்திருந்த இடத்தில் பல கனரக இயந்திரங்கள் சென்றடைந்துள்ளன.

காணாமல்போனவர்களைத் தேடுவதற்கான மீட்புப்பணி தீவிரமாக நடைபெறுகிறது.

திபெத்தில் மட்டும் 546 பேரைக் காணவில்லை.

அவர்களில் 261 பேர் 23 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்