அமெரிக்கக் கப்பல்கள் மீது விதிக்கப்பட்டிருந்த சிறப்புத் துறைமுகக் கட்டணத்தைக் கைவிட்ட சீனா
வாசிப்புநேரம் -
அமெரிக்கக் கப்பல்கள் மீது விதிக்கப்பட்டிருந்த சிறப்புத் துறைமுகக் கட்டணத்தை ஓராண்டுக்குக் கைவிட்டுள்ளதாகச் சீனா இன்று அறிவித்தது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பல மாதங்களாக நிலவிய வர்த்தகப் போர் முடிவுக்கு வந்துகொண்டிருக்கும் தருணத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சென்ற மாதம் தென்கொரியாவில் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்த பின்னர் இரு நாடுகளும் சில வரிகளை அகற்றத் தொடங்கின.
இன்று சிங்கப்பூர் நேரப்படி மதியம் 1 மணிக்குச் சிறப்புக் கட்டணம் கைவிடப்பட்டது.
முதலில் அமெரிக்கா சீனக் கப்பல்கள் மீது விதித்திருந்த சிறப்புத் துறைமுகக் கட்டணத்தை அகற்றியது. அதைத் தொடர்ந்து சீனாவும் அதைச் செய்தது.
தென்கொரியாவின் ஆகப்பெரிய ஹான்வா ஓஷன் (Hanwha Ocean) கப்பல் நிறுவனத்தின்கீழ் செயல்படும் அமெரிக்க நிறுவனங்களுக்கும் சீனா முன்பு தடை விதித்திருந்தது. அதையும் நீக்கிவிட்டதாக இன்று அறிவித்தது.

ஆதாரம் : AFP