Skip to main content
"இணைய வேலைவாய்ப்புத் தளங்களில் சீன உளவுப்பிரிவு வலைவீசுகிறது"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"இணைய வேலைவாய்ப்புத் தளங்களில் சீன உளவுப்பிரிவு வலைவீசுகிறது"

வாசிப்புநேரம் -
"இணைய வேலைவாய்ப்புத் தளங்களில் சீன உளவுப்பிரிவு வலைவீசுகிறது"

(படம்: REUTERS/Maxim Shemetov/Pool)

சீனாவின் உளவுப்பிரிவு இணைய வேலைவாய்ப்புத் தளங்களைப் பயன்படுத்தி ஆள் சேர்ப்பதாக Five Eyes நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலந்து ஆகிய நாடுகள் Five Eyes கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

அரசாங்கம், ராணுவம் அல்லது ரகசியத் தகவல் தெரிந்த யாரையும் குறிவைக்க சீன ராணுவ உளவுப் பிரிவுகள் தயாராக இருப்பதாக 'ரகசியத்தைப் பாதுகாப்போம்' என்ற வெளியீடு கூறுகிறது.

ராணுவம், அரசியல், பொருளாதாரம் தொடர்பான ரகசியத் தகவல்கள் சீனாவின் கரம் மேலோங்கக் காரணமாக அமைந்துவிடும் என்று Five Eyes நாடுகளின் வெளியீடு குறிப்பிட்டது.

இதுபோன்ற எச்சரிக்கைகளைத் தனித்தனியாக நாடுகள் முன்பு விடுத்திருக்கின்றன.

அவை ஒன்றுசேர்ந்து எச்சரித்திருப்பது இது முதல்முறை.

இத்தகைய குற்றச்சாட்டுகளைச் சீனா பலமுறை மறுத்திருக்கிறது.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்