Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரஷ்யா-உக்ரேன் பூசல்: உக்ரேனை நேரடியாகத் தொடர்புகொண்ட சீனா

வாசிப்புநேரம் -
ரஷ்யா-உக்ரேன் பூசல்: உக்ரேனை நேரடியாகத் தொடர்புகொண்ட சீனா

REUTERS/Thomas Peter

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் பூசல் தொடரும் வேளையில் சீனா கீவை நேரடியாகத் தொடர்புகொண்டு, அதுபற்றிப் பேசியுள்ளது.

ரஷ்யாவும் உக்ரேனும் அரசியல் தீர்வு காணும் சாத்தியத்தை நிராகரிக்கக்கூடாது என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சர் சின் காங் (Qin Gang) , உக்ரேனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவிடம் (Dmytro Kuleba) பேசினார்.

உக்ரேன்-ரஷ்யப் போர் இன்னும் மோசமாகி, கட்டுப்பாட்டை மீறிப் போய்விடும் என்று பெய்ச்சிங் கவலைப்படுவதாக அவர் சொன்னார்.

பிரதேச உரிமைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி அவர்கள் பேசியதாய்த் திரு. குலேபா சொன்னார்.

உக்ரேனில் சில வட்டாரங்களை இணைத்துக்கொண்டுள்ளதாக மாஸ்கோ (Moscow) கூறுவதைக் கீவ் நிராக்கிறது.

ரஷ்ய-உக்ரேன் பூசலில் சமரசப் பேச்சுவார்த்தைக்கு இடங்கொடுக்க சீனா அண்மையில் முயற்சி செய்துவருகிறது.

ரஷ்யாவின் படையெடுப்பை அது கண்டிக்காவிட்டாலும், கடந்த மாதம் அது அமைதித் திட்டம் ஒன்றை வெளியிட்டது.

அடுத்த வாரம் சீன அதிபர் சி சின்பிங்கும் (Xi Jinping) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் (Vladimir Putin) சந்திப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பிறகு உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் (Volodymyr Zelenskyy) காணொளிவழி திரு. சி பேசுவார் என்றும் நம்பப்படுகிறது.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்