Skip to main content
பல்கலைக்கழகப் பாடமாக மாறும் பார்பகியூ சமையல் முறை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பல்கலைக்கழகப் பாடமாக மாறும் பார்பகியூ சமையல் முறை

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சீனப் பல்கலைக்கழகம் ஒன்று அந்நாட்டின் முதல் பார்பகியூ (barbecue) ஆய்வு நிலையத்தைத் தொடங்கியுள்ளது.

பார்பகியூ என்பது சீனக் கலசாரத்தில் நிலைத்து நிற்கும் சமையல் முறை.

சீனாவில் பார்பகியூ உணவு விற்பனை பல மில்லியன் டாலரை ஈட்டித்தருகிறது.

இப்போது அது ஒரு பல்கலைக்கழகப் பாடமாக மாறியுள்ளது.

அடுத்த தலைமுறையினரைப் பார்பகியூ துறைக்காகத் தயார்ப்படுத்த அந்தப் புதிய முயற்சி கைக்கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

மூவாண்டில் அங்கு 1,000 கலைஞர்களுக்குப் பயிற்சியளிக்கப்படும்.

மாணவர் சேர்க்கை அடுத்த ஆண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் 50 முதல் 100 மாணவர்கள் பயிலலாம்.

அந்தப் புதிய முயற்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சமூக ஊடகங்களில் அது பற்றியே பேச்சு!

சிலர் பார்பகியூ ஆய்வு நிலையத்தை வரவேற்றாலும் மற்றவர்கள் அதனைக் கேலி செய்கின்றனர்.
 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்