Skip to main content
கார்களின் கதவுகளில் மறைவான கைப்பிடிகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கார்களின் கதவுகளில் மறைவான கைப்பிடிகள் - சீனாவில் இனி தடை

வாசிப்புநேரம் -
கார்க் கதவுகளில் மறைந்திருக்கும் கைப்பிடிகள்..

அந்த அம்சம் உள்ள கார்களுக்கு அடுத்த ஆண்டிலிருந்து சீனாவில் இடமில்லை.

அவற்றைப் பெரும்பாலும் Tesla மின் வாகனங்களிலும் மற்ற ரக மின் வாகனங்களிலும் காணலாம்.

அனைத்துக் கார்களிலும் கதவுகளைத் திறக்கும் கைப்பிடிகளில் இயந்திரம் வழி திறக்கும் அம்சம் இருக்க வேண்டும்.

சீனாவின் தொழில்துறை, தகவல் தொழில்நுட்ப அமைச்சு அது பற்றித் தெரிவித்தது.

மின் வாகனங்கள் விபத்துகளில் சிக்கும்போது மின் கதவுகள் இயங்காமல் போனதால் பயணிகள் வாகனங்களிலேயே மாட்டிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனவே புதிய விதிமுறையின் வழி பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும் என்று அதிகாரிகள் கூறினர்.

அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் தேதியிலிருந்து அந்த விதிமுறை நடப்புக்கு வரும்.

ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள கார்களுக்கு 2029ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படும். அதற்குள் விதிமுறைகளுக்கேற்ப நிறுவனங்கள் மாற்றங்களைச் செய்திட வேண்டும்.
ஆதாரம் : AP

மேலும் செய்திகள் கட்டுரைகள்