உலகம் trending
63 வயதில் தாயான அதிசயம் - மறைந்த மகன் மீண்டும் பிறந்ததாக நெகிழ்ச்சி!
வாசிப்புநேரம் -
படம்: Envato Elements
வடகிழக்கு சீனாவைச் சேர்ந்த 63 வயது பெண் ஒருவர் அண்மையில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு தமது ஒரே மகனை இழந்த சோகத்தில் இருந்த அவருக்கு அந்தக் குழந்தை ஒரு புதிய ஆதாரமாகவும் பலமாகவும் அமைந்துள்ளது.
மார்ச் 4ஆம் தேதி ஜிலின் (Jilin) மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அந்தக் குழந்தை பிறந்தது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது 35 வயது மகன் புற்றுநோயால் காலமானார்.
அந்தப் பேரிழப்பிற்குப் பிறகு தம்பதி சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்ந்தனர்.
செயற்கை கருத்தரித்தல் (IVF) முறையில் கருவுற்ற அவர் 63 வயதிலும் இளம் வயதினரை விட ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் பாராட்டியுள்ளனர்.
அவருடைய பெற்றோர் 90 வயதைக் கடந்து வாழ்ந்ததால் நீண்ட ஆயுளுக்கான மரபணு இருப்பதாக அவர் நம்புகிறார்.
இணையவாசிகள் வெவ்வேறு விதமாகக் கருத்துத் தெரிவித்தனர்.
"இந்தத் தாயின் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள்! இந்த குழந்தை அவருக்கு வாழும் நம்பிக்கையைத் தந்துள்ளது," எனச் சிலர் பாராட்டினர்.
"இது ஒரு சுயநலமான முடிவு. குழந்தை வளர்ந்து வரும்போது, வயதான பெற்றோரைப் பராமரிக்கும் சுமை அதன் தோளில் விழும்," எனச் சிலர் கவலை தெரிவித்தனர்

ஆதாரம் : South China Morning Post