போக்குவரத்துக் கண்ணாடியால் துரதிர்ஷ்டம்? - நகர்த்தியதால் தொடர் விபத்துகள்
வாசிப்புநேரம் -
சீனாவில் ஒரு பெண் போக்குவரத்துக் கண்ணாடியை நகர்த்தியதால் அடுக்கடுக்காகச் சாலை விபத்துகள் நடந்துள்ளன.
சம்பவம் ஷங்ஹாயில் (Shanghai) உள்ள ஒரு குடியிருப்பு வட்டாரத்தில் நடந்தது.
பெண் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டார்.
தாம் துரதிர்ஷ்டத்தால் சிரமப்படுவதாகவும் நம்பினார்.
அதனால் அவர் ஒரு ஃபெங் ஷுய் (feng shui) ஆலோசகரை நாடினார்.
ஃபெங் ஷுய் என்பது வாஸ்து சாஸ்திரத்தைப் போன்றது.
போக்குவரத்துக் கண்ணாடியே பெண் எதிர்நோக்கும் இன்னல்களுக்குக் காரணம் என்று ஆலோசகர் கூறினார்.
அதனைக் கேட்ட பிறகு பெண்ணும் அவரது கணவர் லுவோவும் (Luo) கண்ணாடியை நகர்த்தினர்.
அதைத் தடுக்க எண்ணிய
குடியிருப்பு மேலாண்மை நிறுவனம்
சாலை எதிரில் மற்றொரு கண்ணாடியைப் பொருத்தியது.
பெண் முதலில் அதை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் துரதிர்ஷ்டத்தால் அவரது குடும்பம் பாதிக்கப்படுவதாகச் சொல்லி இரண்டு கண்ணாடிகளையும் நகர்த்தினார்.
அந்தக் கண்ணாடி யாருக்கும் பயன்படுவதில்லை என்று கூறி லுவோ தங்கள் செயலை நியாயப்படுத்தினார்.
ஆனால் குடியிருப்பாளர்கள் அதை மறுத்ததாக South China Morning Post குறிப்பிட்டது.
குடியிருப்பு மேலாண்மை நிறுவனம்
காவல்துறையிடம் விவகாரம் குறித்துத் தகவல் தந்தது.
தம்பதியின் செயல் குற்றமாகக் கருதப்பட்டு அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படலாம் என்று காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
போக்குவரத்து விபத்துகளுக்குத் தம்பதியே பொறுப்பேற்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

ஆதாரம் : South China Morning Post