உலகம் trending
கழிவறையில் கைவிடப்பட்ட சிசு - 28 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றோருடன் சந்திப்பு
Unsplash/Matt Silveira
This audio is generated by an AI tool.
குழந்தையாகக் கைவிடப்பட்ட பெண் ஒருவர் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தம் பெற்றோரைச் சந்தித்துள்ளார்.
அவர் சீனாவில் பிறந்த ஹொங் யாங்லி (Hong Yangli).
ஹொங் அவரது குடும்பத்தில் மூன்றாவது பிள்ளை.
அவருடைய தாத்தா ஆண் பிள்ளைகளையே விரும்பினார்.
ஹொங் பிறந்த மறுநாளே அவரைக் குழந்தைகள் இல்லத்தில் விட்டுவிடவேண்டும் என்று தாத்தா எண்ணினார்.
அப்போது ஹொங்கின் தந்தை வீட்டில் இல்லை; தாய் தம் மாமனாரின் முடிவுக்குச் சம்மதித்தார்.
தாத்தா பச்சிளம் குழந்தையை ஒரு கழிவறையில் கைவிட்டுச் சென்றார்.
120 யுவான் (சுமார் 22 வெள்ளி), பால் மாவு, குழந்தை எந்தத் தேதி பிறந்தது என்ற குறிப்பு ஆகியவற்றையும் அவர் விட்டுச் சென்றார்.
பின்னர் கழிவறைக்குச் சென்ற வழிப்போக்கர் குழந்தையைக் கண்டுபிடித்தார்.
அவர் குழந்தையை ஒரு பராமரிப்பு இல்லத்தில் சேர்த்தார். அங்குதான் குழந்தைக்குப் பெயரிடப்பட்டது.
நெதர்லந்தைச் சேர்ந்த ஒரு தம்பதி ஹொங்கைத் தத்தெடுத்துக் குழந்தையைத் தங்கள் நாட்டுக்கே அழைத்துச்சென்றனர்.
ஹொங்கின் சொந்தத் தாய் அவரைத் தேட முயன்றார். தந்தை குற்ற உணர்ச்சியில் வாடினார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு ஹொங் தமது பெற்றோரைச் சந்திக்க விரும்பினார்.
அவர் மரபணுத் தரவைச் சமர்ப்பித்ததும் அவரது பெற்றோர் யாவர் என்று கண்டறிய காவல்துறை உதவியது.
ஹொங்கின் பெற்றோர் அவரை அமர்க்களமாக வரவேற்றனர்.