Skip to main content
சீனாவைப் புரட்டிப் போடும் சூறாவளி, புயல், வெள்ளம்...
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சீனாவைப் புரட்டிப் போடும் சூறாவளி, புயல், வெள்ளம்...

வாசிப்புநேரம் -
சீனாவைப் புரட்டிப் போடும் சூறாவளி, புயல், வெள்ளம்...

படம்: REUTERS/Ann Wang

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சீனாவின் கிழக்குக் கரையோரப் பகுதி பாவி சூறாவளிக்குத் தயாராகிறது.

ஏற்கனவே நாட்டில் வீசிய புயல்காற்றிலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை.

பாவி சுழல்காற்று வாரயிறுதியில் சீனத் தலைநிலத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்னதாக அது நாளை தைவானை நெருங்கும்.

சூறாவளி மணிக்கு 290 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறது.

இந்நிலையில் சீனாவில் இதற்கு முன் வீசிய புயல்காற்றால் பலர் மாண்டனர்.

வீடுகள் தரைமட்டமாயின.

அதிகாரிகள் மில்லியன் கணக்கான டாலரைப் பேரிடர் நிவாரண நிதிக்கு ஒதுக்கியுள்ளனர்.

இன்னொரு பக்கம் சீன மக்கள் வெள்ளத்தால் அவதிப்படுகின்றனர்.

குவாங்சி பகுதியில் நேர்ந்த வெள்ளத்தில் 39 பேர் மாண்டனர்.

9 பேரை இன்னும் காணவில்லை.

நான்னிங்கில் உள்ள லியூலான் (Liulan) நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம் ஏற்பட்டதாகச் சீன அரசாங்க ஊடகமான Xinhua தெரிவித்தது.
 
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்