Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உக்ரேனில் எவ்வாறு அமைதியை நிலைநாட்டுவது? - ரஷ்ய வெளியுறவு அமைச்சர், சீனாவின் சிறப்புத் தூதர் கலந்துரையாடல்

வாசிப்புநேரம் -
உக்ரேனில் எவ்வாறு அமைதியை நிலைநாட்டுவது? - ரஷ்ய வெளியுறவு அமைச்சர், சீனாவின் சிறப்புத் தூதர் கலந்துரையாடல்

(படம்:Russian Foreign Ministry/Handout via REUTERS)

உக்ரேனில் அமைதியை நிலைநாட்டுவது பற்றி சீனாவின் சிறப்புத் தூதர் லி ஹுவி (Li Hui) ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லவ்ரோவுடன் (Sergey Lavrov) கலந்துரையாடியுள்ளார்.

உக்ரேனில் ஆரம்பித்த திரு.லியின் ஐரோப்பிய பயணம் மாஸ்கோவில் நிறைவடைகிறது.

ஜெர்மனி, பிரான்ஸ், போலந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கும் திரு.லி சென்றிருந்தார்.

கீவில் நிலவும் பூசலைத் தீர்க்கும் வாய்ப்புகளை இரு அதிகாரிகளும் கலந்துரையாடியதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

அமைதி பேச்சுகளில் உள்ள தடைகளுக்கு உக்ரேனும் மேற்கத்திய நாடுகளும் காரணம் என்று திரு.லவ்ரோவ் குறைகூறினார்.

உக்ரேன்-ரஷ்யப் பூசலை முடிவுக்குக் கொண்டுவரும் பெய்ச்சிங்கின் 12 அம்ச அமைதித் திட்டத்திற்குத் திரு.லி ஆதரவு திரட்ட முயற்சி செய்கிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்