Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பூமிக்குத் திரும்பும் தேதி தெரியாமல் மாட்டிக்கொண்ட விண்வெளி வீரர்கள்

வாசிப்புநேரம் -
3 விண்வெளி வீரர்கள் விண்வெளியிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த அவர்கள் ஏற்கனவே 6 மாதங்களுக்கு அங்குதான் இருக்கின்றனர்.

அவர்கள் ஏப்ரல் மாதம் விண்வெளிக்குச் சென்றனர்.

சென் டொங் (Chen Dong), சென் ஸொங்ருய் (Chen Zhongrui), வாங் ஜியெ (Wang Jie) ஆகிய மூவரும் இன்று பூமிக்குத் திரும்ப வேண்டியது.

அவர்களைப் பூமிக்குக் கொண்டுவர வேண்டிய விண்கலனில் சேதங்கள் இருக்கலாம் என்பதால் அவர்களுடைய வருகை தாமதப்படுத்தப்பட்டுள்ளதாகச் சீன விண்வெளி அமைப்பு குறிப்பிட்டது.

சில விண்கலப் பொருள்கள் Shenzhou-20 விண்கலனை இடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சேதத்தைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

விண்கலனைச் சோதிக்க எவ்வளவு காலம் பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்படவில்லை.

விண்வெளி வீரர்கள் எப்போது பூமிக்குத் திரும்புவர் என்றும் தெரியவில்லை.
ஆதாரம் : CNN

மேலும் செய்திகள் கட்டுரைகள்