Skip to main content
தங்கம் முதலீட்டில் $1.4 மில்லியன் லாபம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தங்கம் முதலீட்டில் $1.4 மில்லியன் லாபம் - அதை வாரி வழங்கிய தொழில் முனைவர்

வாசிப்புநேரம் -
தங்கம் முதலீட்டில் $1.4 மில்லியன் லாபம் - அதை வாரி வழங்கிய தொழில் முனைவர்

(படம்: Envato Elements)

தங்கம் முதலீட்டில் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் டாலர் (1.8 மில்லியன் வெள்ளி) லாபம் பெற்றார் ஒரு முதலாளி.

அதை முழுவதுமாக அவரது 2,000 ஊழியர்களுக்குப் பிரித்துக் கொடுத்துள்ளார் சீனாவைச் சேர்ந்த தொழில்முனைவர் லியு மிங்ஜுன் (Liu Mingjun).

இசைக் கலைஞராக இருந்த அவர் 2021ஆம் ஆண்டில் சான்சி (Shanxi) மாநிலத்தில் பேரங்காடி ஒன்றைத் திறந்து வியாபாரம் செய்தார்.

காலப்போக்கில் அதன் 33 கிளைகளைத் திறந்தார். பக்கத்து மாநிலத்திலும் கூடுதல் கிளைகளைத் திறந்தார்.

அவரிடம் தற்போது 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

2 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்வோருக்கு 1,400 டாலரும் (சுமார் 1,790 வெள்ளி) அதற்கும் குறைவாக ஆனால் ஒராண்டுக்கு மேல் வேலை செய்வோருக்கு 270 டாலரும் (சுமார் 350 வெள்ளி) 2 நாள் விடுப்பும் அளித்தார்.

ஓராண்டிற்கும் குறைவாக வேலைசெய்வோருக்கும் 130 டாலரும் (சுமார் 170 வெள்ளி) 2 நாள் விடுப்பும் தந்தார்.

தமது செல்வத்தை ஊழியர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் எண்ணம் நீண்ட நாளாகவே இருந்ததாகத் திரு லியு கூறினார்.

இனிவரும் காலங்களில் அந்த வழக்கத்தைத் தொடரப்போவதாகவும் அவர் சொன்னார்.

இதுபோன்ற முதலாளியைப் பெறுவதே அனைவரின் கனவாகும் என இணையவாசிகள் அவரைப் புகழ்ந்து வருகின்றனார்.


 

ஆதாரம் : South China Morning Post

மேலும் செய்திகள் கட்டுரைகள்