Skip to main content
மண்ணுக்குப் பதில் மாடி வீடுகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

மண்ணுக்குப் பதில் மாடி வீடுகள் - சீனாவில் விநோதப் பழக்கம்!

வாசிப்புநேரம் -
மண்ணுக்குப் பதில் மாடி வீடுகள் - சீனாவில் விநோதப் பழக்கம்!

Unsplash/Declan Sun

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சீனக் கலாசாரத்தில் முன்னோர்களுக்குச் சரியான முறையில் இறுதிச்சடங்கு செய்வது மிக முக்கியமான கடமையாகக் கருதப்படுகிறது.

ஆனால் பெருகிவரும் மக்கள் தொகை, நிலப்பற்றாக்குறை ஆகியவற்றால் இடுகாடுகளின் விலை விண்ணைத் தொட்டுள்ளது.

2023-இல் ஷங்ஹாயில் (Shangai) இடுகாட்டின் விலை ஒரு சதுர மீட்டருக்கு 7,60,000 யுவான் (சுமார் 142,076 சிங்கப்பூர் வெள்ளி) ஆக உயர்ந்தது.

ஷங்ஹாயில் ஒரு குடியிருப்பு வீட்டின் சராசரி விலை சதுர மீட்டருக்கு 55,000 யுவான் மட்டுமே.

இறந்து போனவர்களுக்கு ஒதுக்கும் இடத்தைவிட உயிருடன் இருப்பவர்கள் வாழும் வீட்டின் விலை பல மடங்கு குறைவு.

மயானங்களில் 20 ஆண்டுகள் மட்டுமே உரிமை வழங்கப்படும்.

வீடுகளை வாங்கினால் 70 ஆண்டுகள் வரை உரிமை கிடைக்கிறது.

இதனால் மக்கள் சிறிய நகரங்களில் வீடுகளை வாங்கி அவற்றை 'குடும்ப வழிபாட்டுத் தலங்களாக' மாற்றி அஸ்தி கலசங்களை வைக்கின்றனர்.

நினைத்த நேரத்தில் அஞ்சலி செலுத்தலாம்...

வீட்டைத் தங்களுக்குப் பிடித்தபடி அலங்கரிக்கலாம்...

நிதி நெருக்கடி ஏற்பட்டால் சொத்தாகவும் விற்கலாம்...

இந்த நடைமுறை அக்கம் பக்கத்தினரிடையே பெரும் அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது.

சில நகரங்களில் அடுக்குமாடி வீடுகள் முழுமையாக அஸ்தி கலசங்களைச் சேமிக்கும் இடங்களாக மாற்றப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து குடியிருப்புப் பகுதிகளில் அஸ்தி கலசங்களைச் சேமித்து வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் : South China Morning Post

மேலும் செய்திகள் கட்டுரைகள்