Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சீன நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு ஆதரவு தருகின்றனவா? - கேள்வி எழுப்பவிருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

வாசிப்புநேரம் -

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken),  உக்ரேனியப் போரில் சீன நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளனவா என்று கேள்வி எழுப்பக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதத் தொடக்கத்தில் திரு. பிளிங்கன் சீனத் தலைநகர் பெய்ச்சிங்கிற்குப் பயணம் மேற்கொள்கிறார்.

அப்போது அந்த விவகாரம் குறித்து அவர் பேசவிருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

சீன-அமெரிக்க உறவுகள் மோசமாவதைத் தடுப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளில் ஒன்றாக அந்தப் பயணம் கருதப்படுகிறது.

ரஷ்யாவுக்கு அபாயகரமில்லாத பொருள்களைச் சில சீன நிறுவனங்கள் விற்றதற்கு ஆதாரங்கள் உள்ளதாக அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அந்தப் பொருள்கள் உக்ரேனுக்கு எதிராகப் போரில் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் அந்த நடவடிக்கை பற்றிச் சீன அரசாங்கத்திற்குத் தெரியுமா என்பது தெளிவாக இல்லை.

ரஷ்யாவுக்கு ஆயுதங்களைக் கொடுத்து சீனா உதவி செய்தால், பதிலடி நடவடிக்கைகளை அது சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா ஏற்கெனவே எச்சரித்துள்ளது.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்