உலகம் trending
பாதுகாக்கப்பட்ட நீர் ஆமையைக் கொன்று தின்ற பயிற்றுவிப்பாளர் கைது
வாசிப்புநேரம் -
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இந்தோனேசியாவின் ராஜா அம்ப்பாட் (Raja Ampat) தீவில் முக்குளிப்புப் பயிற்றுவிப்பாளர் பாதுகாக்கப்பட்ட நீர் ஆமையைக் கொன்று தின்றதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பயிற்றுவிப்பாளர் சீனாவைச் சேர்ந்த வெய் ஷாங் (Wei Shang) என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.
அடிக்கடலில் நீந்திக்கொண்டிருந்தபோது அவர் ஈட்டி போன்ற துப்பாக்கியைப் பயன்படுத்தி ஆமையைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
பிறகு அந்த ஆமையைச் சமைத்துச் சாப்பிட்டதாகச் சொல்லப்பட்டது.
சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது. வெய் ஷாங்குக்கு எதிராக ராஜா அம்பாட்டின் பழங்குடிவாசிகள் புகார் கொடுத்தனர்.
அவர் இந்தோனேசியாவிலிருந்து கிளம்பும்போது மக்கசார் (Makassar) நகரின் விமான நிலையத்தில் குடிநுழைவு அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.
விசாரணை நடக்கிறது.
குற்றச்சாட்டை வெய் ஷாங் மறுத்தார். காணொளியில் இருப்பது தான் இல்லை என்றார் அவர்.

ஆதாரம் : Others