உலகம் trending
100 மீட்டர் ஓட்டத்தில் மனிதனைத் தோற்கடித்து அவமானப்படுத்தும் இயந்திர மனிதன்
WANG Zhao / AFP
This audio is generated by an AI tool.
சீனாவைச் சேர்ந்த இயந்திர மனிதக் கருவி 100 மீட்டர் ஓட்டத்தில் புதிய சாதனை படைத்திருக்கிறது.
பெய்ச்சிங்கில் நடைபெற்ற போட்டியில் அது 100 மீட்டர் தூரத்தை 8.86 விநாடிகளில் கடந்தது.
இதற்கு முந்தைய இயந்திர மனிதனின் சாதனை 9.39 விநாடிகளாக இருந்தது. அது மூன்று நாளுக்கு முன்புதான் பதிவானது.
மனிதர்களுக்கான 100 மீட்டர் உலகச் சாதனையைக் காட்டிலும் புதிய இயந்திர மனிதனின் நேரம் குறைவு.
ஜமைக்காவின் உசேன் போல்ட் 2009ஆம் ஆண்டு 9.58 விநாடிகளில் ஓடி உலகச் சாதனை படைத்தார்.
சீனாவின் உலக இயந்தர மனிதப் போட்டியில் புதிய சாதனை பதிவானது.
அதில் 2,000க்கும் அதிகமான இயந்திர மனிதக் கருவிகள் பங்கேற்கின்றன.
ஓட்டம், நீளம் தாண்டுதல், மேசைப் பந்து, நடனம் உள்ளிட்ட 51 வகையான போட்டிகள் இடம்பெறுகின்றன.
வீட்டு வேலைகள், தங்கும் விடுதிச் சேவைகள், அவசரகால மீட்புப் பணிகள் போன்றவற்றிலும் இயந்திர மனிதனின் திறன்கள் வெளிப்படுகின்றன.
மனிதனைவிட வேகமாக ஓடும் இயந்திர மனிதனால் பாதுகாப்பாக நிற்க முடியவில்லை. தடுமாறி விழுகிறது.
மேலும் அவற்றால் ஏற்படும் ஆக்கபூர்வமான பலன்கள் என்னவென்றும் தெளிவாகத் தெரியவில்லை.