Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பொய்க்கூந்தல் கழன்றது...பெண் வேடமிட்டுத் தேர்வு எழுதிய ஆடவர் தப்பியோட்டம்

வாசிப்புநேரம் -
சீனாவில், பல்கலைக்கழகத் தேர்வின்போது நடந்த ஆள்மாறாட்டம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

லீ எனும் மாணவி தமக்குப் பதிலாகத் தேர்வெழுத இணையத்தின் வாயிலாக ஒரு மாணவரின் உதவியை நாடினார்.

போட்டி மிகுந்த கல்விச் சூழலில் சிறப்பாகத் தேர்ச்சி பெற வேண்டும் என்ற ஆசையில் அவர் செய்த வேலை இது.

அவருக்கு உதவிய மாணவர் பெண்ணாக வேடம் தரித்து தேர்வெழுதச் சென்றார்.

அவரது ஒட்டு முடி அப்பட்டமாகத் தெரிந்ததால் அதை நீக்குமாறு ஆசிரியர் கூறினார்.

அவர் உடனே இடத்தைவிட்டுத் தப்பிச் சென்றார்.

லீக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரது பல்கலைக்கழகம் அறிவித்தது.

அவர் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்படலாம்.

இதையடுத்து இணையவாசிகள் பலவித கருத்துகளைத் தெரிவித்ததாக South China Morning Post கூறியது.

சிலர் அதனைக் கேளிக்கையான நிகழ்வாகக் கருதினர்.

மற்றவர்கள் மாணவர்களின் நேர்மையின்மையை எண்ணிக் கவலைப்பட்டனர்.
ஆதாரம் : South China Morning Post

மேலும் செய்திகள் கட்டுரைகள்