Skip to main content
மத்திய கிழக்கில் கடல்வழிப் போக்குவரத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மத்திய கிழக்கில் கடல்வழிப் போக்குவரத்து - பாதுகாப்பதற்கு முன்வந்துள்ள சீனா

வாசிப்புநேரம் -
மத்திய கிழக்கில் கடல்வழிப் போக்குவரத்து - பாதுகாப்பதற்கு முன்வந்துள்ள சீனா

படம்: Reuters/Khaled Desouki

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.


சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping), மத்திய கிழக்கில் கடல்வழிப் போக்குவரத்தைப் பாதுகாக்க உதவ முன்வந்துள்ளார்.

ஈரான் - அமெரிக்கப் போரால் பதற்றம் நீடிக்கும் நிலையில், அவர் இதனை அறிவித்தார்.

கைரோவில் (Cairo) எகிப்து அதிபர் அப்துல் ஃபாத்தா அல்-சிசியைச் (Abdel Fattah al-Sisi) சந்தித்தபோது சீன அதிபர் உதவியளிக்க முன்வந்தார்.

பத்தாண்டுகளில் முதன்முறையாக அவர் எகிப்துக்குச் சென்றுள்ளார்.

மத்திய கிழக்கில் புதிய பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்கவும் சீனா ஆதரவு தெரிவித்திருக்கிறது.

கப்பல் போக்குவரத்துப் பாதைகளைப் பாதுகாப்பதற்கு வட்டார நாடுகளுடன் இணைந்து செயல்படச் சீனா தயாராக உள்ளது என்று அதிபர் சி தெரிவித்தார்.

பூசல் காரணமாக ஹோர்முஸ் நீரிணை, பாப் அல்-மண்டேப் (Bab al-Mandeb) ஆகியவற்றில் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும் பயங்கரவாத எதிர்ப்பை வலுப்படுத்துவதற்கும் தலைவர்கள் ஒப்புக்கொண்டதாகச் சீன அரசாங்க ஊடகமான Xinhua தெரிவித்தது.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்