Skip to main content
குப்பை அள்ளியவர் உலக மேடையில் 'மாடல்'
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

குப்பை அள்ளியவர் உலக மேடையில் 'மாடல்'

வாசிப்புநேரம் -
குப்பை அள்ளியவர் உலக மேடையில் 'மாடல்'

படம்: Facebook/Better World Fund

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சீனாவில் குப்பைகளைச் சேகரிக்கும் இளம்பெண்ணுக்கு, ஆடை அலங்கார உலகில் வாய்ப்புகள் குவிகின்றன.

ஆனால் அதற்காக வேலையை விட அவர் தயாராக இல்லை.

20 வயது லெங் மிங்ஹுய் (Leng Minghui) நல்ல உயரம்!

1.81 மீட்டர்...

குப்பைகளைச் சேகரித்துத் தரம் பிரிக்கும் அவரது காணொளிகள் இணையத்தில் பரவின.

அவரது தோற்றத்தைக் கவனித்த பிரபல மாடல் லூ சியான்ரென் (Lu Xianren), “நீ பிறவி மாடல்” என்று பாராட்டினார்.

அவரே மாடலிங் வாய்ப்புகளையும் அறிமுகப்படுத்தினார்.

அதன்பின் லெங் ஆடை அலங்கார மேடையில் அறிமுகமானார்.

பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களிலும் இடம்பெற்றார்.

பல மாடலிங் நிறுவனங்கள் அழைத்தும், முழுநேர ஆடை அலங்கார அழகியாக அவர் மறுத்துவிட்டார்.

தமது படிப்புக்கு உதவிய காதலரின் குடும்பத்தோடு இருந்து, அவர்களின் குப்பை சேகரிப்புத் தொழிலுக்கு உதவ விரும்புகிறார்.

“குப்பை சேகரிப்பது வயிற்றுப் பிழைப்புக்கு; ஆடை அலங்காரம் என் கனவு. இரண்டையும் செய்யலாம்,” என்கிறார் லெங்.

குப்பை சேகரிக்கும் வேலையும் தொடர்கிறது; ஆடை அலங்காரக் கனவும் தொடர்கிறது.
ஆதாரம் : South China Morning Post

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்