நண்பரின் பெயரில் $3.8 மில்லியன் சொத்து எழுதி வைத்த இளையர்
(படம்: Envato Elements)
This audio is generated by an AI tool.
சீனாவில் இளையர் ஒருவர் தமது நண்பரின் பெயரில் உயில் எழுதி வைத்தது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
19 வயது லீக்கு ஆபத்தான விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம்.
அவர் 20 மில்லியன் யுவான் (3.8 மில்லியன் வெள்ளி) மதிப்புள்ள சொத்து வைத்திருக்கிறார்.
லீயின் பெற்றோர் விவாகரத்துப் பெற்று புதிய வாழ்வைத் தேடிக்கொண்டனர்.
அவர்களுடன் செலவிடும் நேரம் குறைந்ததால் இணக்கமும் குறைந்தது.
எனினும் பெற்றோரின் சொத்து லீயை வந்து சேர்ந்தது.
ஆபத்தான விளையாட்டால் உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம் என்று லீ உணர்ந்தார்.
தாம் மறைந்தால் பெற்றோரின் புதிய உறவுகள் சொத்தைப் பெறக்கூடாது என்று அவர் எண்ணினார்.
சொத்து நண்பரைச் சென்றடையட்டும் என்று அவர் உயில் எழுதினார்.
அது குறித்து இணையவாசிகள் கருத்து பதிவிட்டனர்.
எதிர்காலத்தில் லீ தமது முடிவை மாற்றிக்கொள்வார் என்று சிலர் கூறினர்.
அவரைப் போன்ற நண்பர் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று ஒருவர் ஏங்கினார்.