Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மாணவர்கள் தேர்வில் ஏமாற்றுவதைத் தடுக்க AI அம்சங்களை முடக்கிய சீன நிறுவனங்கள்

வாசிப்புநேரம் -
சீனாவின் போட்டித்தன்மை மிக்க பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் மாணவர்கள் ஏமாற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெரிய சீனத் தொழில்நுட்ப நிறுவனங்கள் சில செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களை முடக்கிவிட்டன.

4 நாள்களுக்குத் தொடரும் தேர்வை 13.3 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர்.

சனிக்கிழமை (ஜூன் 7) தொடங்கிய அந்தத் தேர்வு மாணவர்களுக்குப் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்குமா என்பதை முடிவுசெய்யும்.

இந்த ஆண்டுத் தேர்வின்போது AI மூலம் சிறிது உதவி கிடைக்கும் என்று மாணவர்கள் சிலர் எண்ணியிருந்தனர்.

ஆனால் அந்தச் சேவைகள் முடக்கப்படும் என்று செயலிகள் தெரிவித்து வருகின்றன.

DeepSeek, ByteDance நிறுவனத்தின் கீழ் செயல்படும் Doubao போன்றவை அது பற்றி அறிவித்தன.

பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை முன்னிட்டு, குறிப்பிட்ட நேரத்திற்கு சேவைகள் வழங்கப்படமாட்டா என்று தொழில்நுட்ப நிறுவனங்கள் தெரிவித்தன.
ஆதாரம் : Others/The Guardian

மேலும் செய்திகள் கட்டுரைகள்