Skip to main content
தங்கியிருந்த வீட்டைக் குப்பை மேடாக மாற்றிய சுற்றுப்பயணிகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தங்கியிருந்த வீட்டைக் குப்பை மேடாக மாற்றிய சுற்றுப்பயணிகள் - சீற்றத்தில் இணையவாசிகள்

வாசிப்புநேரம் -
ஜப்பானின் ஒசாக்கா நகரத்தில் சீனச் சுற்றுப்பயணிகள் தாங்கள் தங்கியிருந்த வீட்டைக் குப்பை மேடாக மாற்றிய சம்பவத்திற்குப் பிறகு இணையவாசிகள் பலர் சீற்றமடைந்துள்ளனர்.

3 நாள்களுக்கு அங்கு தங்கிய 5 பேர் இடத்தை அப்படி விட்டுச்சென்றதை ஜப்பானியர் ஒருவர் தம்முடைய X தளத்தில் பதிவிட்டார்.

அவர்கள் Airbnb மூலம் அந்த இடத்தை வாடகைக்கு எடுத்ததாகக் கூறப்பட்டது.

ஜப்பானில் இதுபோன்ற வெளிநாட்டினர் தங்கிச் செல்லும் வீடுகளைச் சுத்தம் செய்ய 5,000 யென் முதல் 15,000 யென் வரை (சுமார் 44 சிங்கப்பூர் வெள்ளி முதல் 134 சிங்கப்பூர் வெள்ளி வரை) ஆகும் என்று வீடுகளை நிர்வகிக்கும் நிறுவனங்களின் இணையப்பக்கங்களில் தெரிவிக்கப்பட்டன.

வீட்டில் தங்கியவர்கள் செய்த செயலால் முதலாளியின் வருமானம் பாதிக்கப்பட்டதுடன் அந்த வீடு தற்காலிகமாக வாடகைக்குக் கிடைக்காது என்றும் கூறப்பட்டது.

X தளத்தில் இடம்பெற்ற பதிவின்கீழ் சீனாவையும் ஜப்பானையும் சேர்ந்த பலர் கருத்துத் தெரிவித்தனர்.

"அந்த 5 பேர் செய்த தவறான செயலால் சீனாவைச் சேர்ந்த அனைவரும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றனர்" என்று ஜப்பானைச் சேர்ந்த இணையவாசி ஒருவர் குறிப்பிட்டார்.

"அவர்கள் ஜப்பானுக்கு வருவதைத் தடைசெய்ய வேண்டும்" என்று மற்றொருருவர் கூறினார்.

வெளிநாட்டினர் தங்கிச் செல்லும் வீடுகளுக்கான கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தும்படி ஒருசிலர் தெரிவித்தனர்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்