Skip to main content
காதலனுடன் வாக்குவாதம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

காதலனுடன் வாக்குவாதம் - 18ஆம் மாடியில் இருந்து குதித்தும் உயிர் தப்பிய பெண்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

காதலனுடன் சண்டையிட்டு 18ஆம் மாடியில் இருந்து குதித்த பெண் உயிர் தப்பியுள்ளார்.

அவர் 20 வயது சியாவ்யீ (Xiaoyi).

சீனாவின் ஸிஜியாங் (Zhejiang) மாநிலத்தில் சம்பவம் நடந்தது.

சியாவ்யீவுக்கும் அவரது காதலனுக்கும் மணிக்கணக்காக வாக்குவாதம் நீடித்தது.

சியாவ்யீ உணர்ச்சி வசப்பட்டு வீட்டின் மாடத்திலிருந்து குதித்தார்.

குறுக்கே மரம் இருந்ததால் அவர் உயிர் பிழைத்தார்.

காதலன் 20,000 யுவான் (சுமார் 3,800 வெள்ளி) செலுத்தி சிசியாவ்யீயை மருத்துவமனையில் சேர்த்தார்.

தலை, நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட பாகங்களில் சியாவ்யீவிற்குக் காயம் ஏற்பட்டது. ஆங்காங்கே எலும்பு முறிந்தது.

சியாவ்யீ தமது காதலனைப் பிரிய விரும்பியதாக அவரது உறவினர் கூறினார்.

காதலன் உடைமைகளைப் பறித்துக்கொண்டு சியாவ்யீயை பூட்டிவைத்ததாகத் தெரிகிறது.

அவரிடம் இருந்து தப்பிக்கச் சியாவ்யீ மாடியில் இருந்து குதித்ததாகச் சொல்லப்பட்டது.

சியாவ்யீவின் குடும்பம் அதிகமான மருத்துவச் செலவை எதிர்நோக்கியது.

அதைச் சமாளிக்கக் குடும்பத்தினர் இணையத்தில் பணம் திரட்டினர்.

சியாவ்யீவின் கதை இணையத்தில் பரவியது.

சியாவ்யீவின் முடிவு முட்டாள்தனமானது; யாருக்காகவும் உயிரை விடுவதில் பயனில்லை என்று இணையவாசிகள் கூறினர்.
ஆதாரம் : South China Morning Post

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்