Skip to main content
சோழர் காலத்துச் செப்புத் தகடுகளைத் திரும்பப் பெற்ற இந்தியா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சோழர் காலத்துச் செப்புத் தகடுகளைத் திரும்பப் பெற்ற இந்தியா

வாசிப்புநேரம் -

நெதர்லந்திடமிருந்து சோழர் காலத்துச் செப்புத் தகடுகளை இந்தியா திரும்பப் பெற்றுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நெதர்லந்து வருகையின் போது அவரிடம் அந்தத் தகடுகள் திருப்பிக் கொடுக்கப்பட்டன. 

21 பெரிய தகடுகள், 3 சிறிய தகடுகள். 

ராஜேந்திர சோழன் தம் தந்தை ராஜராஜ சோழனுக்கு அளித்த வாக்குறுதியைப் பற்றித் தகடுகளில் எழுதப்பட்டிருப்பதாகப் பிரதமர் மோடி தமது Facebook பதிவில் குறிப்பிட்டார்.

சோழர்களின் கலாசாரமும் கடல்துறை பலமும் இந்தியாவுக்குப் பெருமையளிப்பதாகத் திரு மோடி சொன்னார்.

19ஆம் நூற்றாண்டிலிருந்து அந்தத் தகடுகள் நெதர்லந்தின் லைடன் (Leiden) பல்கலைக்கழகத்தில் இருந்தன.

அவற்றைத் திருப்பிக் கொடுத்ததற்காக நெதர்லந்து அரசாங்கத்துக்கும் லைடன் பல்கலைக்கழகத்துக்கும் திரு மோடி தமது நன்றியைத் தெரிவித்தார்.

அந்தப் பதிவுக்குப் பல இந்தியர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

சிலர், வேறு நாடுகளில் இருக்கும் இந்தியப் பொக்கிஷங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று கூறினர்.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்