இந்தியா - பாகிஸ்தான் சண்டை: ஈட்டி எறிதல் போட்டியை ஒத்திவைத்தார் நீரஜ் சோப்ரா
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: REUTERS/Kai Pfaffenbach)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இந்தியத் திடல்தட வீரர் நீரஜ் சோப்ரா அவர் பெயரில் நடைபெறவுள்ள உலக அளவிலான ஈட்டி எறிதல் போட்டியை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.
Tokyo 2020 ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதலில் இந்தியாவிற்குத் தங்கம் வென்றார் திரு சோப்ரா. இம்மாதம் 24ஆம் தேதி அவர் Neeraj Chopra Classic எனும் போட்டியை நடத்தவிருந்தார்.
அதில் பல நாடுகளைச் சேர்ந்த முன்னனி வீரர்கள் பங்குபேறுவர் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானும் இடையே சண்டை நீடிப்பதால் போட்டியை ஒத்திவைப்பதாக அவர் கூறினார்.
நேற்று இரு நாடுகளிலும் கிரிக்கெட் லீக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து திரு சோப்ராவின் அறிவிப்பு வந்துள்ளது.
அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் விளையாட்டுக்கு உண்டு; ஆனால் இதுபோன்ற நேரங்களில் ராணுவ வீரர்களுக்கு நன்றியையும் ஆதரவையும் தெரிவித்து நாட்டிற்குப் பக்கபலமாக இருப்பது மிகவும் முக்கியம் என்றார் திரு சோப்ரா.

ஆதாரம் : Reuters