நியூஸிலந்தில் பதவியேற்றார் புதிய பிரதமர்

(படம்: Marty MELVILLE / AFP)
நியூஸிலந்தின் தொழிற்கட்சித் தலைவர் கிரிஸ் ஹிப்கின்ஸ் (Chris Hipkins) நாட்டின் பிரதமராக அதிகாரபூர்வமாய்ப் பதவி ஏற்றிருக்கிறார்.
கடந்த வாரம் ஜசிண்டா ஆர்டன் (Jacinda Ardern) திடீரெனப் பதவி விலகியதைத் தொடர்ந்து இன்று (25 ஜனவரி) திரு. ஹிப்கின்ஸ் பிரதமர் பொறுப்பை ஏற்றார்.
திருவாட்டி ஆர்டன் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறும்போது நூற்றுக் கணக்கானோர் அவரைக் காண நாடாளுமன்ற வளாகத்தில் கூடினர்.
மன்ற உறுப்பினர்கள் பலர் கண்ணீர் மல்க அவருக்குப் பிரியாவிடை கொடுத்தனர்.
திரு. ஹிப்கின்ஸ், இதுவரை அவரது கொள்கைகள் குறித்து எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
அவரது முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று பின்னேரத்தில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
COVID-19 நோய்ப்பரவலின்போது, திரு. ஹிப்கின்ஸ் முக்கியப் பொறுப்பு வகித்திருந்தார்.
நியூஸிலந்தில், வரும் அக்டோபர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
அப்போது திரு. ஹிப்கின்ஸ் பிரதமர் பதவியில் தொடர்வதற்குக் கடினமான போட்டியை எதிர்நோக்கலாமெனக் கூறப்படுகிறது.