மரண தண்டனை முயற்சி தோல்வி: கவலைக்கிடமான நிலையில் கைதி
வாசிப்புநேரம் -
(படம்: Handout / TENNESSEE DEPARTMENT OF CORRECTION / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்காவில் இரு முறை நச்சு ஊசி செலுத்தப்பட்ட போதும் உயிர்பிழைத்த மரண தண்டனைக் கைதி கிறிஸ்டா பைக் (Christa Pike) மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்.
டென்னசி மாநிலத்தைச் சேர்ந்த அந்த 50 வயதுப் பெண்ணுக்கு உயிர்காப்புச் சிகிச்சை வழங்கப்படுகிறது.
பென்டோபார்பிட்டல் (Pentobarbital) எனப்படும் நச்சு ஊசி செலுத்தப்பட்டபோதிலும் அவர் சுயநினைவுடன் இருந்ததாகக் கூறப்பட்டது.
எவ்வாறு உயிர் பிழைத்தார் என்பது தெளிவாகவில்லை என்றும் சொல்லப்பட்டது.
பைக்கிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என அவரது வழக்கறிஞர் வலியுறுத்தினார்.
பைக் ஏற்கனவே 20 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளதாகவும் பெரும் வலியை அனுபவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நச்சு ஊசி சரியாக வேலை செய்யாதது குறித்து விரிவான, மூன்றாம் தரப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மாநில ஆளுநர் கூறினார்.
1996ஆம் ஆண்டு பைக் தனது காதலருடன் சேர்ந்து 19 வயதுப் பெண்ணை அடித்துக் கொன்றார்.
அப்போது அவருக்கு 18 வயது.
அந்தக் குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆதாரம் : AFP