மலேசிய நிலம் இந்தோனேசியாவிற்குத் தரப்பட்டதா?
வாசிப்புநேரம் -
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim) 5,000 ஹெக்டருக்கும் அதிகமான நிலம் இந்தோனேசியாவுக்குத் தரப்பட்டதாகக் கூறப்படுவதை நிராகரித்திருக்கிறார்.
சபா- கலிமந்தான் எல்லையில் உள்ள மூன்று கிராமங்களுக்கு இழப்பீடாக நிலம் இந்தோனேசியாவிற்குத் தரப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
நாடாளுமன்றத்தில் பேசிய திரு அன்வார் அது பொய்த்தகவல் என்றார்.
நூறாண்டுக்கு முன்பு மலேசியாவும் இந்தோனேசியாவும் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் எல்லைகள் வரையறுக்கப்பட்டுவிட்டதாக அவர் சொன்னார்.
அந்தக் கிராமங்கள் இருக்கும் பகுதியை மலேசியா தனது பிரதேசம் என அதிகாரபூர்வமாக அங்கீகரித்ததே இல்லை என்று அவர் சுட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்குப் பதில் விளக்கங்கள் கேட்க வேண்டும் என்று திரு அன்வார் வலியுறுத்தினார்.

ஆதாரம் : Others