Skip to main content
"உலகப் பருவநிலை மாற்றம் மோசமடையும் அறிகுறிகள் தென்படுகின்றன"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"உலகப் பருவநிலை மாற்றம் மோசமடையும் அறிகுறிகள் தென்படுகின்றன"

வாசிப்புநேரம் -
"உலகப் பருவநிலை மாற்றம் மோசமடையும் அறிகுறிகள் தென்படுகின்றன"

Olivier MORIN / AFP

உலகில் பருவநிலை மாற்றம் மோசமடைவதற்கான அறிகுறி தென்படுகிறது. 

சென்ற ஆண்டு (2023) வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவு உச்சத்தைத் தொட்டது. இந்த ஆண்டு (2024) நிலைமை மேலும் மோசமாகலாம். 

வருடாந்திர உலகளாவிய பருவநிலை மாற்ற அறிக்கையில் அது தெரியவந்துள்ளது. 

சென்ற ஆண்டை இதுவரையில்லாத அளவு மிகக் கடுமையான வெப்பம் நிறைந்த ஆண்டு என்று உலக வானிலை ஆய்வக அமைப்பு உறுதிப்படுத்தியது. 

பெருங்கடல்கள் கொதிப்பது, கடலில் பனிக்கட்டிகள் உருகுவது, பனியோடைகள் சுருங்குவது ஆகியன 
பருவநிலை மாற்றத்துக்கு முக்கியக் காரணங்கள். 

கடுமையான வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் சமாளித்து வருகின்றனர். 

உலக நாடுகள் விரைவாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். 

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்