Skip to main content
flydubai இணை விமானிக்கு முன்னர் ஓமானில் தடை விதிக்கப்பட்டிருந்தது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

flydubai இணை விமானிக்கு முன்னர் ஓமானில் தடை விதிக்கப்பட்டிருந்தது

வாசிப்புநேரம் -
flydubai இணை விமானிக்கு முன்னர் ஓமானில் தடை விதிக்கப்பட்டிருந்தது

படம்: Reuters/Ammar Awad

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இஸ்ரேலுக்குச் சென்றுகொண்டிருந்த flydubai விமானத்தில் விமானியைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இணை விமானிக்கு முன்னர் ஓமானில் தடை விதிக்கப்பட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

அவர் ஓமானைச் சேர்ந்த ஹமாம் அல் ஹம்மாமி (Hamam al-Hammami) என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.

அவர் இதற்கு முன்னர் தீவிரவாதச் சித்தாந்தங்களுக்கு ஆளானதால் அவருக்கு ஓமானில் தடை விதிக்கப்பட்டது என்று பல ஊடகங்கள் கூறுகின்றன.

விமானம் நடுவானில் இருந்தபோது அவர் இந்தியாவைச் சேர்ந்த விமானி ஸ்மித் மச்சரைத் (Smit Machchhar) தாக்கினார்.

திரு மச்சர் விமானி அறையின் கதவைத் திறந்ததால் பயணிகள் சிலர் அறைக்குள் ஓடி ஹமாமைக் கட்டுப்படுத்தினர்.

விமானம் அவசரமாகச் சவுதி அரேபியாவில் தரையிறக்கப்பட்டது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்