Bubble Tea-இல் கரப்பான்பூச்சி! அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன
வாசிப்புநேரம் -
தைவானில் ஒருவர் Bubble Tea அருந்திக் கொண்டிருந்தபோது கரப்பான்பூச்சியைப் பார்த்தார்.
அந்தச் சம்பவத்தை அவர் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டார்.
கரப்பான்பூச்சியை உறிஞ்சிவிட்டதாக அவர் புலம்பினார்.
ஏதோ விநோதமான பொருளை உறிஞ்சியதாக அவர் உணர்ந்தார். அதைத் துப்பியபோதுதான் கரப்பான் என்று தெரிந்தது. உடனே வாந்தி எடுக்கத் தொடங்கியதாக அவர் கூறினார்.
பிரபல Bubble Tea கடையான Chatime அந்தக் கரப்பான் டீயை விற்றதாக அவர் புகார் சொன்னார்.
அவர் இரண்டு டீ குவளைகளை வாங்கியதாகவும், அவை ஒரே முறை தயாரிக்கப்பட்டதாகவும் சொன்னார். எனவே மற்ற பானங்களிலும் பிரச்சினை இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
சம்பவத்துக்கு Chatime மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
அனைத்துக் கடைகளையும் ஒருநாள் மூடுவதாக அது அறிவித்தது.
அந்த வாடிக்கையாளர் பணத்தைத் திருப்பிக் கொடுத்தால் மட்டும் போதாது என்று கூறிவிட்டார்.
அதிகாரிகளிடம் புகார் செய்யப் போவதாக அவர் கூறுகிறார்.

ஆதாரம் : Others/8world