கோயம்புத்தூர் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் - 3 சந்தேக நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு
வாசிப்புநேரம் -
(படம்: Envato Elements)
கோயம்புத்தூரில் கல்லூரி மாணவியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களைக் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்துள்ளது.
சந்தேக நபர்கள் தப்பி ஓட முயன்றதாகச் சொல்லப்பட்டது.
அவர்கள் அரிவாளை வைத்துத் தாக்கியதில் ஓர் அதிகாரிக்குக் காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
சந்தேக நபர்களைத் தடுத்து நிறுத்த அதிகாரிகள் அவர்களது கால்களில் சுட்டனர்.
அவர்கள் பின்னர் கோயம்புத்தூர் அரசாங்க மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 20 வயது கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகினார்.
அந்தக் கல்லூரி கோயம்புத்தூர் அனைத்துலக விமான நிலையத்துக்குப் பக்கத்தில் உள்ளது.
சந்தேக நபர்கள் பெண்ணின் நண்பரைத் தாக்கிவிட்டு, பெண்ணைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் மூவரும் குணா, கருப்பச்சாமி, கார்த்திக் எனும் காலீஸ்வரன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மூவரிடமும் விசாரணை தொடரும்.

ஆதாரம் : Others