Skip to main content
உலகச் செல்வந்தர்களின் மொத்தச் சொத்து மதிப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உலகச் செல்வந்தர்களின் மொத்தச் சொத்து மதிப்பு - புதிய உச்சம்

வாசிப்புநேரம் -
உலகச் செல்வந்தர்களின் மொத்தச் சொத்து மதிப்பு - புதிய உச்சம்
(படம்: Envato Elements)
உலகில் செல்வந்தர்களின் மொத்தச் சொத்து மதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

உலகப் பொருளியல் மாநாட்டிற்காக பன்னாட்டுத் தலைவர்களும் வர்த்தகர்களும் சுவிட்சர்லந்தில் கூடியிருக்கின்றனர்.

இவ்வேளையில் Oxfam அறநிறுவனம் செல்வந்தர்களின் மொத்தச் சொத்து மதிப்பைக் கணக்கிட்டுள்ளது.

கடந்த ஆண்டு பணக்காரர்களின் சொத்து மதிப்பு 16 விழுக்காட்டுக்குமேல் அதிகரித்து 18.3 டிரில்லியன் டாலராகப் (சுமார் 23.5 டிரில்லியன் வெள்ளி) பதிவானது.

உலக அளவில் முதன்முறை பணக்காரர்களின் எண்ணிக்கையும் 3,000ஐத் தாண்டியுள்ளது.

பட்டியலில் முதல் 12 இடத்தில் உள்ளவர்களின் சொத்துக்கள் உலக ஏழைகளில் பாதிப் பேரின் செல்வத்தை விட அதிகம்.

மிதமிஞ்சிய சொத்துக்களைப் பயன்படுத்தி செல்வந்தர்கள் தங்கள் அரசியல் செல்வாக்கை உயர்த்திக்கொள்ளும் போக்கு அதிகரித்திருப்பதாய் Oxfam எச்சரித்துள்ளது.
 
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்