உலகம் trending
நகைச்சுவை நிகழ்ச்சியில் விபரீதம்
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்
This audio is generated by an AI tool.
மெக்சிகோவில் நேரடித் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விபரீதம் ஏற்பட்டது.
நகைச்சுவை நிகழ்ச்சியில் நடந்ததைக் காட்டும் காணொளி இணையத்தில் உலா வருகிறது.
காணொளியில் படைப்பாளர் அர்னேஸ்டோ சவானாவுக்கு (Ernesto Chavana) அருகே ஆளில்லா வானூர்தி பறந்துகொண்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது.
அவர் திடீரென்று அதை உதைக்கிறார்.
மேடையில் சவானாவுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த விளம்பர அழகியின்மீது அது விழுகிறது.
அழகியின் வாய்ப்பகுதியில் ரத்தம் தெரிகிறது.
அவர் உடனே மேடையைவிட்டு வெளியேறுகிறார்.
"என்ன செய்திருக்கிறீர்கள்!" என்று சவானா நிகழ்ச்சித் தயாரிப்பு ஊழியர்களிடம் கேட்பதைக் காணொளியில் பார்க்கமுடிகிறது.
நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் மன்னிப்புக் கேட்டதாக The Sun ஊடகம் கூறியது.
"நான் தவறு செய்துவிட்டேன். நிகழ்ச்சியில் ஏதோ ஒரு சூழலில் ஆளில்லா வானூர்தி பயன்படுத்தப்பட்டது. அதை உதைத்துவிட்டேன் ," என்று சவானா சொன்னார்.
விளம்பர அழகிக்கான சிகிச்சை செலவைத் தயாரிப்புக் குழு ஏற்றுக்கொள்ளும் என்று Cronica எனும் ஊடகம் சொன்னது.