Skip to main content
போட்டிபோட்டு மன்னிப்புக் கேட்கும் நிறுவனங்கள்... ஏன்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

போட்டிபோட்டு மன்னிப்புக் கேட்கும் நிறுவனங்கள்... ஏன்?

வாசிப்புநேரம் -
போட்டிபோட்டு மன்னிப்புக் கேட்கும் நிறுவனங்கள்... ஏன்?
படங்கள்: Instagram/Nippon Paint India, Skoda India, Volkswagen India
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தவறு செய்தால் மன்னிப்புக் கேட்பது இயல்பு.

நிறுவனங்கள் அவற்றின் சேவைகள் அல்லது பொருள்களில் குறையிருந்தால் மன்னிப்புக் கேட்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் சமீபத்தில் சமூக ஊடகங்களில் புதிய பாணி ஒன்று தொடங்கியுள்ளது.

பல நிறுவனங்கள் சிறப்பான சேவை அல்லது பொருள்களை வழங்குவதற்கு மன்னிப்புக் கேட்டு குறும்பான பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றன.

குறிப்பாக இந்தியாவில் அந்தப் போக்கு அதிகமாகக் காணப்படுவதாக Hindustan Times நாளிதழ் குறிப்பிட்டது.

Nippon Paint, Skoda, Volkswagen போன்ற பிரபல வெளிநாட்டு நிறுவனங்களின் இந்தியக் கிளைகளும் அந்த விளம்பர பாணியைப் பின்பற்றியுள்ளன.
சென்ற ஆண்டு பிலிப்பின்ஸில் இந்த விளம்பர பாணி தொடங்கியதாக நம்பப்படுகிறது. இருப்பினும் இந்தியாவில் அண்மையில்தான் அது மிகவும் பிரபலமாகி வருகிறது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து தரமான பொருள்களையும் சேவைகளையும் வழங்குவதைப் பொதுமக்கள் மனத்தில் பதிய வைக்க வேடிக்கையான இந்த விளம்பரங்கள் நிறுவனங்களுக்கு உதவக்கூடும் என்று விளம்பர நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும் இணையவாசிகளிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுவதாக Hindustan Times நாளிதழ் குறிப்பிட்டது.

சிலர் இது ஒரு மிகவும் சாமர்த்தியமான விளம்பர உக்தி என்று புகழ்கின்றனர்.

வேறு சிலரோ நிறுவனங்கள் தற்பெருமையை வெளிப்படுத்திக்கொள்ள இவ்வாறு செய்வதாகக் குறைகூறுகின்றனர்.
ஆதாரம் : Others/Hindustan Times

மேலும் செய்திகள் கட்டுரைகள்