Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசாங்க ஊழியர்களுக்குக் கட்டாயப் பரிசோதனை நடத்தப்படவேண்டும் - அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசாங்க ஊழியர்களுக்குக் கட்டாயமாகக் கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசாங்க ஊழியர்களுக்குக் கட்டாயப் பரிசோதனை நடத்தப்படவேண்டும் - அமெரிக்க அதிபர்

AP Photo/Patrick Semansky

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசாங்க ஊழியர்களுக்குக் கட்டாயமாகக் கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அந்த நடவடிக்கை அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென அவர் அரசாங்க அமைப்புகளிடம் கூறியுள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசாங்க ஊழியர்கள் வாரம் ஒரு முறை கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்க அரசாங்க ஊழியர்கள் நவம்பர் 22ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லையென்றால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று திரு. பைடன் கூறியிருந்தார்.

ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என அவர் சொன்னார்.

பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் வரும் ஊழியர்கள் வாரம் ஒருமுறை கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம் என்று பைடன் நிர்வாகம் தெரிவித்தது.

வீட்டிலிருந்து வேலை செய்வோருக்கு அது பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்