Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் exclusive

பிரசவத்துக்குப் பின் உதவிக்கு ஆளில்லாமல் தவிக்கும் தாய்மார்கள்....அவர்களுக்கு உதவப் பயிற்சியளிக்கும் மலேசியர்

வாசிப்புநேரம் -
தாய் - சேய் நலப் பராமரிப்புச் சேவை....

பிள்ளை பெற்றெடுக்கும் தாய்மார்கள் அதிகம் தேடிவரும் சேவையாகத் தற்போது இது மாறிவருகிறது.

பிள்ளை பெற்றெடுக்கும் பெண்களை, சில சமயம் அவர்களது குடும்பத்தார் பக்கத்திலிருந்து பார்த்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்படுகிறது.

அந்தப் பிரச்சினையைச் சமாளிக்கக் கைகொடுக்கிறது தாய் - சேய் நலப் பராமரிப்புச் சேவை.

சேவையை வழங்குவோரின் எண்ணிக்கை காலப்போக்கில் குறைந்துவிட்டது. ஆனால் தேவையைப் புரிந்துகொண்டு, அதைப் புதுப்பித்து, பயிற்சிகளை வழங்கிவருகிறார் கோலாலம்பூரைச் சேர்ந்த திலகவதி முனியசாமி.

சிங்கப்பூரர்கள் உட்பட இதுவரை 1,000க்கும் அதிகமான பெண்களுக்கு இவர் பயிற்சி அளித்துள்ளார்.

அவ்வாறுப் பயிற்சி பெற்றவர்களில் 300 பெண்கள் இந்தச் சேவையை முழு நேர வேலையாகச் செய்துவருகின்றனர்.

திலகவதியைச் சந்தித்தது 'செய்தி'.
 

மேலும் செய்திகள் கட்டுரைகள்