பட்டினியால் அவதிப்படும் ஆப்கான் மக்கள்
வாசிப்புநேரம் -
ஆப்கானிஸ்தானில் கடுமையான குளிர்.
உலக நாடுகளின் உதவியும் தடைபட்டதால் போதிய உணவு கிடைக்கவில்லை.
ஆப்கானிஸ்தானில் சுமார் 17 மில்லியன் பேர் பட்டினியில் வாடுகின்றனர்.
அவர்களில் பெரும்பாலோர் ஈரானிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் திருப்பி அனுப்பப்பட்டவர்கள்.
ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு ஒருவேளை மட்டுமே உணவு கிடைக்கிறது.
நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிறது.
உயிர் வாழ்வதை விட செத்துப் போவதே சிறந்தது என்று சிலர் ஆதங்கப்படுகின்றனர்.
ஈரானும் பாகிஸ்தானும் இரண்டரை மில்லியனுக்கும் அதிகமான ஆப்கானிஸ்தானியர்களைத் திருப்பி அனுப்பியதாக மதிப்பிட்டுள்ளது ஐக்கிய நாட்டு நிறுவன உலக உணவு அமைப்பு.
பக்கத்து நாடுகளிலிருந்து அண்மையில் திருப்பி அனுப்பப்பட்டவர்களுக்கு இயன்றவரை உரிய உதவிகளை வழங்குவதாகச் சொல்கிறது ஆப்கானிஸ்தான்.
வருமானமும் வளங்களும் இழந்து நாற்பது ஆண்டுகளாக வறுமையின் பிடியில் சிக்கியுள்ள நாட்டை வளமாக்குவது எளிதல்ல; அது மாபெரும் சவால்; இருப்பினும் மறுசீரமைப்பு முயற்சிகளை மும்முரமாய்த் தொடர்வதாகக் கூறுகிறது ஆப்கானிஸ்தான்.

ஆதாரம் : Reuters