Skip to main content
மலேசியாவின் சபா மாநிலத் தீ விபத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மலேசியாவின் சபா மாநிலத் தீ விபத்து - அடுப்பை அணைக்க மறந்ததால் விபரீதம்

வாசிப்புநேரம் -
மலேசியாவின் சபா மாநிலத் தீ விபத்து - அடுப்பை அணைக்க மறந்ததால் விபரீதம்

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: Facebook/Mua Man Ashaari

வெளியீடு : 20 Apr 2026 09:32PM புதுப்பிப்பு : 20 Apr 2026 09:50PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மலேசியாவின் சபா மாநிலத்தில் நடந்த தீ விபத்துக்குக் குடியிருப்பாளர் ஒருவரின் கவனக்குறைவே காரணம் என்று கூறப்படுகிறது.

சமையல் செய்துகொண்டிருந்த அவர் அடுப்பை அணைக்காமல் விட்டுச் சென்றுவிட்டார்.

திரும்பி வந்து பார்த்தபோது தீ பரவத் தொடங்கியது.

அணைக்க முயன்றார்; முடியவில்லை.

விளைவு....கிராமம் முழுதும் தீ பரவியது.

பின்னிரவு 1.10 மணியளவில் தீ பரவத் தொடங்கியதாகக் கிராமத் தலைவர் கூறியிருக்கிறார்.

அந்தக் கிராமத்தில் சுமார் 1,200 வீடுகள் இருப்பதாக Sinar Harian ஊடகம் கூறுகிறது.

இதற்குமுன்னர் 1993, 2001ஆம் ஆண்டுகளில் கிராமத்தில் தீ ஏற்பட்டுள்ளது.

ஆனால் இதுவே மிக மோசமான தீ விபத்து என்று கிராமத் தலைவர் சொன்னார்.

அவர் 1988ஆம் ஆண்டிலிருந்து அங்கு வசித்து வருகிறார்.

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்