பாம்பைப் பிடித்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் சென்ற தம்பதி

Social media
ஒருவர் தலை... இன்னொருவர் வால்...
மலேசியாவின் ஜொகூர் பாருவில் ஒரு தம்பதி மலைப்பாம்பைப் பிடித்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் பயணம் செய்துள்ளனர்.
தம்பதியின் செயலைக் காட்டும் காணொளி TikTok தளத்தில் வலம் வந்தது.
வீட்டிற்குள் மலைப்பாம்பு நுழைந்தது...
தீயணைப்பாளர்கள், மீட்புக் குழுவிடம் தகவல் அனுப்பினர் தம்பதி...
அரை மணி நேரம் ஆகியும் யாரும் வரவில்லை.
வேலைக்குச் செல்லவும் நேரமாகிவிட்டது...
தாங்களாகவே மலைப்பாம்பை வீட்டிலிருந்து அகற்ற முடிவெடுத்தனர் தம்பதி.
வீட்டில் ஏற்கெனவே பாம்பைப் பிடிப்பதற்கான கருவிகளும் இருந்தன.
அவர்கள் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்குப் பாம்பை எடுத்துச் செல்லத் திட்டமிட்டனர்.
@imrine23 எனும் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில் கணவர் மோட்டார்சைக்கிளில் அமர்ந்திருப்பதைக் காணமுடிகிறது.
மனைவி மலைப்பாம்பின் தலைப் பகுதியை அவரிடம் கொடுக்கிறார்.
மனைவி வால் பகுதியைப் பிடித்துக்கொண்டு கணவருக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் அமர்கிறார்.
கணவர் ஒரு கையில் பாம்பைப் பிடித்துக்கொண்டே மோட்டார் சைக்கிளை ஓட்டுகிறார்.
காணொளியைக் கண்ட இணையவாசிகள் வியந்தனர்.
'பாம்பைத் தேடிப் போகலாம் என்று அதிகாரிகள் நினைத்திருப்பார்கள்...ஆனால் பாம்பு அவர்களைத் தேடி வந்துவிட்டது...' என்று சிலர் வேடிக்கையாகக் கூறினர்.