அனல்பறக்க உடலில் தீ வைத்துக்கொண்டு திருமண வரவேற்பில் பங்கேற்ற புதுமணத்தம்பதி...

(கோப்புப்படம்: Gabe_Jase / Instagram)
நெருப்போடு விளையாடி தொழிலில் சாகசம் செய்பவர்களைக் கண்டிருக்கிறோம்… அமெரிக்காவில் ஒரு தம்பதி தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உடலில் தீ வைத்துக்கொண்டு சாகசம் புரிந்திருக்கின்றனர்.
TikTok செயலியில் வெளியான காணொளி பல பார்வையாளர்களையும் எதிர்மறையான கருத்துகளையும் பெற்றுள்ளது.
தொழில்முறை சாகசக் கலைஞர்களான தம்பதி தங்கள் திருமணத்திற்கு வித்தியாசமான கருப்பொருளைத் தேடினர்.
மேலும் தங்கள் தொழிலை வாழ்வில் மறக்கமுடியாத நாளாக இருக்கும் திருமண நாளில் இணைக்க முனைந்தனர்.
விளைவு திருமண நிகழ்ச்சியிலிருந்து விடைபெற்றுக்கொள்ளும்போது தங்கள் திருமண உடையில் தீப்பற்றவைத்துக்கொண்டு வெளியேறினர்.
அவர்கள் பின்னே இரண்டு தீயணைப்பாளர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
புதுமணத் தம்பதி பயிற்சி பெற்ற தொழில் வல்லுநர்கள் என்பதால் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் திருமண வரவேற்பு இனிதே நடந்து முடிந்தது.