சீனா - கையூட்டுப் பெற்ற அதிகாரிக்கு மரண தண்டனை
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சீனாவில் கையூட்டுப் பெற்றதற்காக 69 வயது முன்னாள் அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Yang Youlin எனும் அந்த அதிகாரி 30 ஆண்டுகளில் $325 மில்லியன் டாலர் கையூட்டாகப் பெற்றிருக்கிறார்.
1993ஆம் ஆண்டிலிருந்து 2023 வரை யாங், நன்ஜிங் மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார்.
அப்போது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, கையாடல், பண மோசடி எனப் பல்வேறு குற்றங்களை அவர் புரிந்திருக்கிறார்.
பணம், விலை மதிப்புமிக்க பொருள்கள் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு சிலர் பொறியியல் ஒப்பந்தங்கள் பெறவும், நிலத்தை மாற்றிக்கொள்ளவும் அவர் உதவியது விசாரணையில் தெரிய வந்தது.
அதிபர் சி சின் பிங்கின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக யாங்கிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பதவி ஏற்றது முதல் அதிபர் சி ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கிறார்.
இருப்பினும் ஊழல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது அரிது.
ஒரு பில்லியன் யுவானுக்கு மேல் ஊழல் செய்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும்

ஆதாரம் : Others