Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கோவிட் பரவலைப் பொறுத்தவரை உலகம் இன்னமும் இருள்சூழ்ந்த சுரங்கத்தில் இருக்கிறது: உலகச் சுகாதார நிறுவனத் தலைவர்

வாசிப்புநேரம் -
கோவிட் பரவலைப் பொறுத்தவரை உலகம் இன்னமும் இருள்சூழ்ந்த சுரங்கத்தில் இருக்கிறது: உலகச் சுகாதார நிறுவனத் தலைவர்

(கோப்புப் படம்: Laurent Gillieron/Keystone via AP)

உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் உலகம் இன்னமும் கோவிட் பரவல் ஆபத்திலிருந்து வெளியே வரவில்லை என்று கூறியுள்ளார். 

கோவிட் சூழல் முற்றுப்பெற்றது என்பதை அறிவிப்பதற்கு நீண்டகாலம் எடுக்கலாம் என்று அவர் எச்சரித்தார். 

உலகம் இதுவரை இல்லாத அளவில் கோவிட் பரவலை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் சிறந்த நிலையில் இருப்பதாகத் திரு கேப்ரியேசஸ் சொன்னார். 

உலகில் மூன்றில் இரு பங்கினருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதை அவர் சுட்டினார். 

கோவிட் நோய்ப்பரவலைப் பொறுத்தவரை உலகம் இருள்மிகுந்த சுரங்கத்தில் ஈராண்டுக்கு மேல் இருந்து வந்திருப்பதாக வருணித்த திரு கேப்ரியேசஸ், இப்போதுதான் சிறிய அளவில் வெளிச்சம் தெரிவதாகக் குறிப்பிட்டார்.

இருப்பினும் சுரங்கத்திலிருந்து வெளியேற நீண்டகாலம் எடுக்கும் என்றும் அதில் பல தடைகளைக் கடந்துசெல்ல வேண்டியிருக்கும் என்றும் கவனத்துடன் செயல்படாமல் இருந்தால் அதில் கீழே விழக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa