Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 அனைத்துலகச் சுகாதார நெருக்கடியாக அறிவிக்கப்பட்டு நாளையுடன் 3 ஆண்டுகள்

வாசிப்புநேரம் -
உலகச் சுகாதார நிறுவனம் COVID-19 கிருமிப்பரவலை அனைத்துலகச் சுகாதார நெருக்கடியாக அறிவித்து நாளையுடன் மூவாண்டாகிறது.

உலக நாடுகளில் சராசரியாக 10இல் ஒருவர் கிருமிப்பரவலால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று நிறுவனம் கூறுகிறது.

அதன் அடிப்படையில் ஏறக்குறைய 750 மில்லியன் பேரைக் கிருமி தொற்றியுள்ளது.

ஒட்டுமொத்தமாகச் சுமார் 7 மில்லியன் மரணங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டின் இறுதி நிலவரப்படி, COVID-19, 300 முறைக்கும் மேல் புதுவகைக் கிருமியாக உருமாறியுள்ளது.

உலகின் பெரும்பாலான நாடுகள் கிருமிப்பரவலை நிரந்தர நோயாகக் கருதுகின்றன.

அதன் மூலம் கற்ற பாடங்கள் ஏராளம் என்று கூறிய அவை, 100 ஆண்டுகள் காணாத சுகாதார நெருக்கடி இது என வருணித்தன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்