Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 இன்னும் ஓயவில்லை - உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

வாசிப்புநேரம் -
COVID-19 இன்னமும் தீர்மானிக்க முடியாத நோயாகவே இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது.

நோய் எந்தப் போக்கில் செல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நாளாகலாம். அதற்குமுன் அது மேலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்கிறது சுகாதார நிறுவனம்.

கடந்த 28 நாள்களில் 23,000 க்கும் அதிகமானோர் மாண்டனர். புதிதாக 3 மில்லியன் பேருக்கு நோய் கண்டுள்ளது.

பரிசோதனை குறைந்துள்ள நிலையில் அந்த எண்ணிக்கை பெரிது என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறியது.

COVID-19 நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் இன்னமும் நிறைய மரணங்கள் ஏற்படுகின்றன, நிறையப் பேர் பாதிக்கப்படுகின்றனர் என்று நெருக்கடிக்கால இயக்குநர் மைக்கல் ராயன் (Michael Ryan) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மூன்று மாதத்துக்கு ஒருமுறை சந்திக்கும் COVID-19 நெருக்கடிக்காலக் குழு அடுத்த மாத ஆரம்பத்தில் கூடவிருக்கிறது.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்