Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 எங்கிருந்து வந்தது? விடை கிடைக்கும்வரை விடப்போவதில்லை - உலகச் சுகாதார நிறுவனம்

வாசிப்புநேரம் -

COVID-19 கிருமிப்பரவல் எங்கிருந்து, எப்படித் தொடங்கியது என்பதைக் கண்டுபிடிக்காமல் விடப்போவதில்லை என உலகச் சுகாதார நிறுவனம் (WHO) கூறியிருக்கிறது.

அவ்விவகாரத்தைத் தாங்கள் கைவிட்டு விட்டதாகச் சொல்லப்படுவதை நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் (Tedros Ghebreyesus) மறுத்தார்.

வருங்காலத்தில் இத்தகைய நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்க SARS CoV-2 கிருமி எங்கிருந்து எப்படி வந்தது, மனிதர்கள் மத்தியில் எவ்வாறு பரவியது என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் அவசியம் என்றார் அவர்.
2019ஆம் ஆண்டு இறுதியில் அந்தக் கிருமிப்பரவல் சீனாவில் தொடங்கியது.

எனினும் அதன் தொடர்பான ஆய்வுகளுக்குச் சீனாவிடமிருந்து சரிவர ஒத்துழைப்பு கிடைக்காததால் உலகச் சுகாதார நிறுவனம் அதன் ஆய்வுகளைக் கைவிட்டுவிட்டதாக Nature இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கு விளக்கமளித்த டாக்டர் டெட்ரோஸ் சீன அதிகாரிகளுக்கு அதிகாரபூர்வக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

இதற்கு முன் 2021 இல் அனைத்துலக நிபுணர்கள் குழுவொன்றை உலகச் சுகாதார நிறுவனம் சீனாவுக்கு நேரடியாக அனுப்பியது.

ஆயினும் அதில் பெறப்பட்ட தகவல்கள் வெளிப்படையாக இல்லை என விமர்சனங்கள் எழுந்தன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்