Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மாட்டின் ஏப்பம்... அதிலிருக்கும் மீத்தேன் வாயுவை விண்ணிலிருந்து காணலாம்

வாசிப்புநேரம் -
மாட்டின் ஏப்பம்... அதிலிருக்கும் மீத்தேன் வாயுவை விண்ணிலிருந்து காணலாம்

(படம்: Pixabay)

மாடுகள் ஏப்பமிடும்போது வெளியாகும் மீத்தேன் (methane) எனும் வெப்பவாயுவை விண்ணிலிருந்து காணலாம் என்று சுற்றுச்சூழல் தரவுகளைத் திரட்டும் நிறுவனமான GHGSat தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள மாட்டுப் பண்ணை ஒன்றிலிருந்து நிறுவனத்தின் செயற்கைக்கோள் மீத்தேன் வெளியேற்றப்படுவதைச் சுமார் ஐந்து முறை பதிவுசெய்திருந்தது. 

மீத்தேன் வெளியேற்றம் ஆண்டு முழுவதுமாய் அந்த நிலையில் இருந்தால் ஆண்டுக்கு 15,402 வீடுகளுக்கு எரிசக்தி வழங்கப் போதிய எரிவாயு கிடைக்கும் என்று நிறுவனம் சொன்னது. 

ஆடு, மாடுகள் வெளியேற்றும் மீத்தேன் வாயு பருவநிலை மாற்றத்தை விளைவிக்கும் பெரிய காரணங்களில் ஒன்று. மாடுகள் அவற்றின் உணவைச் செரிமானம் செய்யும்போது பெரிய  அளவிலான மீத்தேன் வாயுவை அவற்றின் ஏப்பத்தின் மூலம் வெளியேற்றுகின்றன. 

வெளியேற்றப்படும் மீத்தேன் உலகின் சுற்றுப்புறத்தில் தங்கியிருந்தபடி வெப்பத்தை உள்வாங்கித் தங்கச் செய்யும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa